சீர்காழியில் நீர்வள மேலாண்மை பயிற்சி முகாம்

சீர்காழி, ஜன.30: சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சீர்காழி ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் ஆலோசனையின்பேரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நீர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் நீர் மேலாண்மை மாநில பயிற்றுனர் விஜயா கலந்துகொண்டு நீர் மேலாண்மை குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். இதில் காவிரிபூம்பட்டினம் ஊராட்சி தலைவர் சசிக்குமார், கொண்டல் ஊராட்சி தலைவர் விஜயன், மங்கைமடம் ஊராட்சி தலைவர் சோமசுந்தரம், மருதங்குடி ஊராட்சி தலைவர் அலெக்சாண்டர் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், கிராம வறுமை ஒழிப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>