×

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

கரூர், ஜன. 30: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கில் சுதந்திரப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கலெக்டர் மலர்விழி தலைமையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்திய அரசியலமைப்பின்பால், இடைவிடாத உளமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன், குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாக கொண்டு, எவர்மீதும், தெரிந்தோ, தெரியாமலோ சமுக வேற்றுமைய, மனம், வாக்கு செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன் எனவும், சமய வேறுபாடற்ற சுதந்திர சமூதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றுக்கு இது என்னென்றும் எடுத்துக் காட்டாக விளங்குமென்னும் இதனால் உளமாற உறுதியளிக்கிறேன் என்ற உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில், கலெக்  டரின் நேர்முக உதவியாளர் அருள், அலுவலக மேலாளர் சுரேஷ்குமார், தாசில்தார் பிரபு உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags : Abolition of Untouchability ,Office ,Karur Collector ,
× RELATED முதலாமாண்டு மாணவர் சேர்க்கை...