கலெக்டர் தலைமையில் ஏற்பு தாந்தோணிமலை அருகே வாலிபரை தாக்கிய 3 பேர் கைது

கரூர், ஜன. 30:கரூர் தாந்தோணிமலை அருகே வாலிபரை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தீபன்(20). கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலைதேடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கரூர் ராயனூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த குணா என்பவரின் மனைவியுடன் தீபன் கடந்த சில நாட்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த குணா, மற்றும் இவரின் நண்பர்கள் உதயகுமார், பாபு ஆகிய மூவரும், நேற்று முன்தினம் மாலை தீபனை, மில்கேட் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கி விட்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது.இதனால், காயமடைந்த தீபன், கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். இவரின் புகாரின் அடிப்படையில், தாந்தோணிமலை போலீசார் குணா உட்பட மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>