×

கடலூரில் காவல் துறை வாகனத்தை சாலையில் மறித்து நிறுத்தியதால் கடும் போக்குவரத்து பாதிப்பு

கடலூர், ஜன. 30: கடலூரில் கிளை சிறை சாலையில்  காவல் துறை வாகனத்தை சாலையில் மறித்து நிறுத்தியதால் கடும் போக்குவரத்து பாதிப்பு, வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். கடலூரில் நேற்று வன்னியர் சங்கம், பாமக சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்கும் போராட்டத்துக்காக வந்தவர்கள் அனைவரும் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மஞ்சக்குப்பம் திடலில் திரண்டிருந்தனர். இந்நிலையில் இந்த திடலுக்கு அருகில் உள்ள கிளை சிறை சாலையில் போராட்டத்துக்கு வந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி யாரும் செல்லாத வண்ணம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு காவல் துறை வாகனம் சாலையை மறித்து நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் இந்த சாலையில் இரு சக்கர வாகனங்கள், கார், வேன் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து ெநரிசல் ஏற்பட்டது. கிளை சிறை சாலையில் பிரபல தனியார் கல்லூரி, கோட்டாட்சியர் அலுவலகம், இந்த சமய துறை உதவி ஆணையர் அலுவலகம், வணிக வரித்துறை அலுவலகம், மாவட்ட அரசு இசைப்பள்ளி, வழக்கறிஞர் அலுவலகங்கள், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் பல்வேறு அலுவலகங்கள் என அனைவரும் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் எப்போதும் கடும் வாகன ெநரிசலும், அதிக மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையாக இந்த சாலை இருக்கும். இப்படி உள்ள நிலையில் காவல் துறையினர் வன்னியர் சங்க போராட்டத்துக்கு வந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றுவிடுவார்கள் என சாலையை மறித்து வாகனத்தை நிறுத்தி பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் நீண்ட நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படும் நிலை காணப்பட்டது.

Tags : Cuddalore ,road ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!