×

கோலப்போட்டியில் வென்ற பெண்களுக்கு பரிசு

அருப்புக்கோட்டை, ஜன. 30: தைப்பொங்கலையொட்டி, அருப்புக்கோட்டை சட்டமன்றத்தொகுதி முழுவதும் திமுக சார்பில் பெண்களுக்கு கோலப்போட்டி நடந்தது. இதில், பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சிறந்த கோலங்களுக்கு சிறப்பு பரிசுகளும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அஜிஸ்நகர் பகுதியில் கோலப்போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் நகர் மன்றத்தலைவர் சிவப்பிரகாசம் தலைமை வகித்தார். மாவட்ட பிரதிநிதி சிக்கந்தர் வரவேற்றார். சாத்தூர் ராமச்சந்திரன் எம்எல்ஏ பரிசுகளை வழங்கினார்.  நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியச் சேர்மன் சுப்பாராஜ், நகர திமுக செயலாளர் மணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி, ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் சோலையப்பன், சிறுபான்மை பிரிவு மைதீன்பாட்ஷா, வார்டு செயலாளர் ராஜா முகமதுசேட், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அழகுராமனுஜம், திமுக பிரமுகர்கள் வெங்கடேஷ், சிவசங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : women ,match ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது