இருதரப்பு மோதல் 7 பேர் மீது வழக்கு

வருசநாடு, ஜன.30:கடமலைக்குண்டு அருகே பாலூத்து கிராமத்தை சேர்ந்தவர் சேகரன்(42). கடமலை-மயிலை ஒன்றிய 3வார்டு அதிமுக கவுன்சிலராக உள்ளார். இவருக்கும் தேவராஜ்நகர் கிராமத்தை சேர்ந்த காளிமுத்துவிற்கும் முன்பகை இருந்துள்ளது. நேற்று முன்தினம் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் காளிமுத்து மற்றும் அவரது மனைவி பிரபா, மகன் திவாகரன், தந்தை மகாராஜன் காயமடைந்தனர். மற்றொரு தரப்பை சேர்ந்த சேகரன், அவரது தந்தை பவுன்சாமி காயமடைந்தனர். இதுகுறித்து புகார் செய்ய ேவல்முருகன் என்பவருடன் டூவீலரில் காளிமுத்து சென்றுள்ளார். அவர் மீது காரை கொண்டு சேகரன் மோதி விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் வேல்முருகன் காயமடைந்தார். காளிமுத்து அளித்த புகாரின் பேரில் சேகரன், பவுன்சாமி உள்பட 4 பேர் மீதும் மற்றொரு தரப்பில் புகாரின் பேரில் காளிமுத்து, பிரபா, திவாகரன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories:

>