×

கொட்டும் பனியால் எலுமிச்சை விலை சரிவு தேவாரம் விவசாயிகள் கவலை

தேவாரம், ஜன. 30: தேனி மாவட்டத்தில் தைமாத பணி இன்னும் குறையவில்லை. ஆனால், அதிக அளவில் பனி கொட்டி வருகிறது. இதனால் முதியவர்கள், பெரும் சிரமம் அடைந்துவருகின்றனர். கோடை காலங்களில் உச்சகட்ட விலை உயர்விற்கு செல்லும் எலுமிச்சை, தற்போது விலை குறைந்துள்ளது. எலுமிச்சை விலை ஏற்றம் பெறாமல் உள்ளது. குறிப்பாக, கொடைக்கானல், ஹைவேவிஸ், போடிமெட்டு, மலைப் பகுதிகளில் விளையக்கூடிய எலுமிச்சை தினந்தோறும் மாவட்டத்தில் பல ஊர்களுக்கும், விற்பனைக்கு வருகிறது. கோடைகாலங்களில் ஒரு கிலோ ரூ.200க்கு மேல் விற்பனையாகும் எலுமிச்சை இன்னும் விலை உயராமல் உள்ளது என்றும், இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ எலுமிச்சை ரூ. 60க்கு மட்டுமே விற்கப்படுகிறது. இதனால் இவற்றை விளைவிக்கக்கூடிய விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கோடைகாலம் தொடங்கிவிட்டால், அதிகமான அளவில் பல்வேறு கடைகளிலும், விற்பனைக்கு வரக்கூடிய எலுமிச்சை பனி கொட்டுவதால், தேவை குறைந்துள்ளது. இதனால் விலை உயரவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...