தேனி அரசு மருத்துவமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆண்டிபட்டி, ஜன.30: தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புபேட்ஜ் அணிந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி க.விலக்கு பகுதியில் அமைந்துள்ள தேனி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செவிலியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் ஜோஸ்வின் ஜென்னி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழகத்தில் பணிபுரியும் அரசு செவிலியர்களுக்கு மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஐந்து கட்ட காலமுறை ஊதிய உயர்வு வழங்கவும். கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு அரசு அறிவித்த ஊதியத்தை ஊக்கத் தொகையாக வழங்குதல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு விரைந்து வழங்கிட வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>