×

மீன்சுருட்டி காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

ஜெயங்கொண்டம், ஜன. 30: 37வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மீன்சுருட்டி காவல் துறை சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பட்டேல் நிறுவனம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்டு கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. அப்போது, பள்ளி மாணவர்கள் கைகளில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் கோஷம் எழுப்பியவாறு ஊர்வலம் சென்றனர்.

படேல் நிறுவன பொது மேலாளர் மல்லிகா அர்ஜுன்ராவ் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்திற்கு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ், முதல்நிலைத் திட்ட மேலாளர் சானவகான், உதவி மேலாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், இருபால் ஆசிரியர்கள், போலீசார் மற்றும் படேல் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Tags : Meensurutti Police Department ,Jayankondam ,37th Road Safety Month ,Government Higher Secondary School ,Patel Institute ,Government Higher Secondary School… ,
× RELATED பாடாலூரில் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி