பரமக்குடி மாணவ, மாணவிகள் தேசிய தடகள போட்டிக்கு தேர்வு

பரமக்குடி, ஜன.30: பரமக்குடியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 3 பேர் தேசிய அளவிலான தடகள போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் 34வது மாநில அளவிலான தடகள போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பரமக்குடியை சேர்ந்த 2 பள்ளி மாணவிகள் உட்பட 3 பேர் பங்குபெற்றனர். இதில் பெண்களுக்கான தடகள  குண்டு எறிதல் 18 வயது பிரிவில் ஷர்மிளா என்ற மாணவி 13.85 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். மேலும், பெண்களுக்கான குண்டு எறிதல் சீனியர் பிரிவில் ஷர்மிளா  12.33 மீட்டர் தூரம் ஏறிந்து மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார். 16 வயது பிரிவு குண்டு எறிதல் போட்டியில் மதுமிதா என்ற மாணவி  13.49 மீட்டர் தூரம் இருந்து இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்களுக்கான 16 வயதுக்குட்பட்ட 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சரண் என்ற மாணவர் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். மாநில அளவிலான தடகளப் போட்டியில் வெற்றிபெற்ற இந்த மூன்று பேரும் வருகிற பிப்.5ம் தேதி முதல் 10ம் தேதி வரை அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறும்  தேசிய தடகள போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் அசுகரன் ஸ்போர்ட்ஸ் கிளப் பயிற்சியாளர் அருண் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பாராட்டினர்.

Related Stories:

>