முன்னாள் எம்பி நினைவுதினம் பரமக்குடியில் திமுக கொடியேற்றம்

பரமக்குடி, ஜன.30: ராமநாதபுரம் முன்னாள் திமுக எம்பி எம்எஸ்கே.சத்தியேந்திரன் 35ம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பரமக்குடி சந்தக்கடை பகுதியில் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து சத்தியேந்திரனின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் 33வது வார்டு செயலாளர் வீரபாண்டியன் வரவேற்றார். முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திசைவீரன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.டி.அருளானந்து, ஒன்றியக்குழு துணைத் தலைவர் பூமிநாதன், மாவட்ட கவுன்சிலர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆற்றுப்பாலம், எமனேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய பொறுப்பாளர்கள் சந்திரசேகர், போகலூர் கே.கே.கதிரவன், போகலூர் ஒன்றிய பொருளாளர் குணசேகரன், முன்னாள் மாவட்ட பதிவாளர் மற்றும் திமுக நிர்வாகி பாலு, பரமக்குடி நகர செயலாளர்கள் சேது கருணாநிதி, ஜீவரத்தினம், பரமக்குடி நகர இளைஞரணி அமைப்பாளர் சன் சம்பத்குமார், போகலூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் பாண்டியன், பொறியாளர் செந்தில் செல்வானந்த், நகர மாணவரணி துணை அமைப்பாளர் தர்மராஜா, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஜோசப் குழந்தை ராஜா, 36வது வார்டு பொறுப்பாளர் தங்க மோகன்ராஜ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில், நகர் தெற்கு பொறுப்புக் குழு உறுப்பினர் முத்து பழனிகுமார் நன்றி கூறினார்.

Related Stories:

>