அர.சக்கரபாணி எம்எல்ஏ தலைமையில் வாக்குச்சாவடிகள் குழு நிர்வாகிகள் ஆலோசனை

ஒட்டன்சத்திரம், ஜன.30: திண்டுக்கல் மேற்கு மாவட்டம், தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளிமந்தையத்தில் வாக்குச்சாவடிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாக்குச்சாவடிகளில் முகவர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்தும், தேர்தல் காலங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது குறித்தும், வாக்காளர்களை சந்திப்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர் தங்கராஜ், ஒன்றிய பெருந்தலைவர் சத்தியபுவனா, ஒன்றிய துணை பெருந்தலைவர் தங்கம் (எ) பி.சி.தங்கம், கள்ளிமந்தையம் ஊராட்சிமன்ற தலைவர் கணேசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், துணை அமைப்பாளர் ஆனந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: