×

போக்சோ சட்டத்தில் லாரி டிரைவர் கைது

பழநி, ஜன.30:  சிறுமியிடம் சில்மிஷம் செய்த லாரி டிரைவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.கொடைக்கானல் அருகே புத்துப்புதூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் மாயவன் (24). லாரி டிரைவர். பழநி அருகே வயலூர் பகுதியில் உள்ள மில்களுக்கு சரக்கு சென்று வந்தபோது 13 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்து கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பழநி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Truck driver ,
× RELATED தொழில் போட்டியில் லாரி டிரைவரை கடத்திய கிளீனர் உட்பட 4 பேர் கைது