ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் திறப்பு ₹33 லட்சம் காணிக்கை வசூல்

நாமக்கல்,  ஜன.30: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் 3  மாதத்துக்கு ஒரு முறை திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது. அதன்படி நேற்று 6  உண்டியல்களும் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. கோயில் ஊழியர்கள் மற்றும்  மகளிர் சுயஉதவி குழுவினர், உண்டியலில் உள்ள காணிக்கையை எண்ணும் பணியில்  ஈடுபட்டனர். மொத்தத் ₹33.63 லட்சம் ரொக்கம், 38 கிராம் தங்கம் மற்றும் 22  கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

Related Stories:

>