கடலூர்: நெல்லிக்குப்பம் அருகே செம்மண் குவாரி விவகாரத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி கோபால் கைது: துப்பாக்கி மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்தனர். துப்பாக்கியுடன் தகராறில் ஈடுபட்ட வீடியோ வைரலான நிலையில், அதிமுக நிர்வாகி கைது செய்யபட்டார். துப்பாக்கி காட்டி தகராறில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி கோபால் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
