×

தர்மபுரிக்கு 1ம் தேதி மு.க.ஸ்டாலின் வருகை இன்பசேகரன் எம்எல்ஏ அறிக்கை

பென்னாகரம், ஜன.30: தர்மபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: ஊழல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து தமிழகத்தை மீட்க, பல்வேறு வகையில், பல தளங்களில் தொடர்ந்து போராடி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களை சந்தித்து உரையாடி, குறைகளை நேரடியாக கேட்டறிந்து வருகிறார். வரும் 1ம் தேதி மதியம் 1 மணிக்கு, தர்மபுரி மாவட்டம், தடங்கம் கிராமத்தில் கிருஷ்ணகிரி -சேலம் நான்கு வழிசாலையை ஒட்டி, தடங்கம் மேம்பாலத்திற்கு கிழக்கே உள்ள திடலில் நடைபெறும் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பொதுமக்களுடன் உரையாடி குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெறுகிறார்.

எனவே, மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், பல்வேறு தொழிற்சங்கத்தினர், மகளிர், பொதுமக்கள் என அனைவரும் தங்கள் குறைகளை மனுக்களாக அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், திமுக தலைவரின் வருகையை பொதுமக்களிடம் தெரியப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : MK Stalin ,visit ,Dharmapuri ,1st Inbasekaran MLA ,
× RELATED மாணவியை பலாத்காரம் செய்த...