×

கடத்தூர் பகுதியில் திமுக சார்பில் ஆட்டோ பிரசாரம்

கடத்தூர், ஜன.30: தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில், திருவண்ணாமலையில் நேற்று(29ம் தேதி) தனது பிரசார பயணத்தை துவங்கினார். வரும் 1ம் தேதி, அவர் தர்மபுரி மாவட்டத்திற்கு வருகிறார். அவரது வருகையை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி முழுவதும் ஆட்டோவில் பிரசாரம் செய்யப்படுகிறது. கடத்தூர் பேருந்து நிலையத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முனிராஜ் தனேந்திரன் தலைமையில், ஆட்டோ விளம்பர வாகன பேரணி துவக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சித்தார்த்தன், தனபால், நெப்போலியன், ஜெகநாதன், நகர செயலாளர் கேஸ் மணி, ஜெயச்சந்திரன், உதயகுமார், குபேந்திரன், ஜெயராமன், அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Auto campaign ,area ,DMK ,Kadatur ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...