தெற்குகள்ளிகுளம் தட்சணமாற நாடார் சங்க கல்லூரி பொன்விழா இன்று நடக்கிறது

நெல்லை, ஜன. 30: தெற்குகள்ளிகுளத்தில் உள்ள திருநெல்வேலி தட்சணமாற நாடார் சங்க கல்லூரி பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, இன்று காலை 10.35 மணிக்கு நடக்கிறது. கல்லூரி ஆட்சிக்குழு மற்றும் கல்லூரிக்குழு தலைவர் கணேசன் தலைமை வகிக்கிறார். கல்லூரி தாளாளர் சண்முகவேல் வரவேற்கிறார். தட்சணமாற நாடார் சங்க தலைவர் காளிதாசன், பொருளாளர் செல்வராஜ், இயக்குநர் ராஜன், கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கல்லூரி முதல்வர் ராஜன், பொன்விழா ஆண்டறிக்கை வாசிக்கிறார். சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் ராஜரத்தினம், எஸ்என்ஜே குரூப்ஸ் சேர்மன் ஜெயமுருகன், ஆச்சி குரூப் ஆப் கம்பெனி நிறுவனர் பத்மசிங் ஐசக், இன்பதுரை எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஞானசேகர், ராஜபால், கல்லூரிக்குழு உறுப்பினர் சுயம்புராஜ், திசையன்விளை ஜெயந்தி நாதர் மரைன் கல்லூரி செயலர் ராஜேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர்.

விழாவின் முதல் நிகழ்ச்சியாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. தொடர்ந்து ராஜா பலவேசமுத்து நாடார் வெண்கல சிலை, குமரேச சீனிவாசன் நாடார், சவுந்தர பாண்டியன் நாடார் நினைவு கட்டிடங்கள், கல்லூரியின் முதல் முதல்வர் பால்சாமி நினைவு கேன்டீன் கட்டிடம், முதுநிலை வேதியியல் கட்டிடம் திறப்பு விழா நடக்கிறது. தமிழ்த்துறை தலைவர் நிர்மலா நன்றி கூறுகிறார். பின்னர் கல்லூரி ஆண்டு விழா நடக்கிறது. சிறப்பு விருந்தினராக ரங்கராஜ் பாண்டே பங்கேற்கிறார்.

Related Stories:

>