×

மாடு முட்டி ராணுவ வீரர் பலி கம்மவான்பேட்டை காளை விடும் விழாவில்

கண்ணமங்கலம், ஜன.30: கம்மவான்பேட்டையில் நடந்த காளை விடும் விழாவை வேடிக்கை பார்க்க சென்ற ராணுவ வீரர் மாடு முட்டியதில் பரிதாபமாக பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், படவேடு அடுத்த துரிஞ்சாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன்(26). உத்தர பிரதேச மாநிலம் டேராடூனில் ராணுவ வீரராக இருந்தார். இவருக்கு ஜோதிகா(22) என்ற மனைவி, ஒன்றரை வயது குழந்தை உள்ளனர்.இந்நிலையில், வேலூர் மாவட்டம், கம்மவான்பேட்டை கிராமத்தில் கடந்த 24ம் தேதி காளை விடும் திருவிழா நடந்தது. ராணுவவீரர் லோகநாதன், அங்குள்ள தெருமுனையில் நின்று கொண்டு விழாவை பார்த்து கொண்டிருந்தார். அப்போது, சீறிப்பாய்ந்து ஓடிவந்த காளை ஒன்று திடீரென லோகநாதனை முட்டி தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சந்தவாசலில் உள்ள ஒரு தனியார் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், லோகநாதனின் உடல் நிலை மோசமாகி, நேற்று காலை வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் லோகநாதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ேஜாதிகா வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணுவ வீரர் மாடு முட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Cow soldier ,Kammavanpet ,bullfighting ceremony ,
× RELATED பிரமாண்டமான தேசிய கொடிகளை கையில் ஏந்தினர் கம்மவான்பேட்டையில் கொடிநாள்