×

சென்டர்மீடியனில் லாரி மோதியது ஹைமாஸ் விளக்கு பழுதால் விபத்து ஒடுகத்தூர் அருகே

ஒடுகத்தூர், ஜன.30: வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி கம்பிகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று அதிகாலை 2 மணியளவில் அகரம் கூட்ரோடு அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாரத விதமாக அங்குள்ள சென்டர்மீடியன் மீது லாரி மோதியது. இதில் சென்டர்மீடியன் முழுவதுமாக நொறுங்கியதோடு, லாரி டயர்களும் சேதமானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை.இதுகுறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் எஸ்ஐ குட்டியப்பன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். விசாரணையில் லாரி டிரைவர் ஆலங்காயம் அடுத்த ரெட்டியூரை சேர்ந்த லோகநாதன் என தெரிந்தது. விபத்து நடந்த பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததாலும், தூக்க கலக்கத்தில் வந்ததாலும் சென்டர் மீடியன் மீது மோதியது தெரிந்தது. இதையடுத்து லாரியை அப்புறப்படுத்தினர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘வேலூர், ஒடுகத்தூர், மாதனூர், குடியாத்தம் சந்திப்பு பிரதான பகுதியாக அகரம் சாலை உள்ளது. இங்குள்ள ஹைமாஸ் விளக்கு பழுதாகி சுமார் 6 மாதங்கள் ஆகிறது. இதனால் அடிக்கடி சிறுசிறு விபத்துகள் தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை’ என தெரிவித்தனர்.

Tags : Odugathur ,Hymas ,
× RELATED ஒடுகத்தூர் அருகே பைக்கில் சாராயம் கடத்திய வாலிபர் கைது