டிரைவர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி

குடியாத்தம், ஜன.30: குடியாத்தத்தில் டிரைவர்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு குடியாத்தம் காந்தி நகரில் உள்ள மோட்டார் வாகன அலுவலகத்தில் நேற்று டிரைவர்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. குடியாத்தம் மோட்டார் வாகன முதல் நிலை ஆய்வாளர் வெங்கட்ராகவன் தலைமை தாங்கினார். குடியாத்தம் அரசு மருத்துவமனை கண் மருத்துவர் சுமதி மற்றும் மருத்துவக்குழுவினர் டிரைவர்களுக்கு இலவச கண் சிகிச்சை அளித்தனர். இதில், ஆட்டோ, பஸ், வேன் ஓட்டும் குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட டிரைவர்கள் பங்கேற்றனர். அப்போது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து செயல்முறை விளக்கம் செய்யப்பட்டது. மேலும், விழிப்புணர்வு நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

(வேலூர்) டீக்கடை, வீடுகளில் மது விற்ற 3 பேர் மீது வழக்கு

திருவலம், ஜன.30: தைப்பூசத்தையொட்டி நேற்று முன்தினம் அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பதுக்கி வைத்து மது பானங்களை விற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்திருந்தனர். இந்நிலையில் சேர்க்காடு, திருவலம் பகுதிகளில் உள்ள வீடுகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக திருவலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்ஐ பிச்சாண்டி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேர்க்காடு சின்னதெருவில் வசிக்கும் சந்திரசேகரன்(44) வீட்டில் 5 மது பாட்டில்களும், திருவலம் பழைய காட்பாடி ரோட்டை சேர்ந்த ஜெயகுமார்(57) என்பவர் வீட்டில் 5 பாட்டில்கள், புதிய தெருவில் குமார்(40) என்பவரது டீக்கடையில் 5 பாட்டில்கள் என மொத்தம் 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>