×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா

திருப்பூர், ஜன.30: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் சித்ரா தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உண்ணிகிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் எல்லம்மாள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
சி.ஐ.டி.யு. கட்டிட கட்டுமான சங்க மாநில பொதுச்செயலாளர் குமார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட நிர்வாகி பானுமதி. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில செயலாளர் நிசார் அகமது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பாக்கியம் நிறைவுரையாற்றினார். இதில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.ஓய்வுபெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் பணிக்கொடையாக 10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், 200 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Dharna ,
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...