செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜன.30:மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஒரு மாத ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். கொரோனாவால் பாதித்த செவிலியர்களுக்கு நிவாரணம் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று திருப்பூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பணி பாதிக்காத வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து அவர்கள் பணியில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகள் குறித்து கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் உடுமலை அரசு மருத்துவமனை, தாராபுரம் அரசு மருத்துவமனை என மாவட்டம் முழுவதும் 350 செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Related Stories:

>