×

மாவட்டத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊட்டி, ஜன. 30: மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க கோரி நீலகிரி மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் துவக்கத்தில் 133 கடைகள் இயங்கி வந்தன. பல்வேறு காரணங்களால் இந்த கடைகள் குறைந்து தற்போது 74 கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதனால், இந்த கடைகளில் பணியாற்றி வந்தவர்கள் தற்போது வேறு கடைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒரு கடையில் 5 நபர்கள் மட்மே பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது ஒரு கடைகளில் 10 நபர்கள் வரை பணியாற்றி வருகின்றனர்.இந்த நிலையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை வகித்தார். டாஸ்மாக் மாநில சம்மேளன குழு உறுப்பினர் நவீன்சந்திரன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலூகா தலைவர் ராஜேந்திரன், சிஐடியு., மாவட்ட தலைவர் சுந்தரம், ஸ்டெர்லிங் பயோடெக் ஊழியர்கள் சங்க தலைவர் ராஜரத்தினம் உட்பட பலர் கலந்துக் கொண்டு பேசினார். தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.  இதில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் வன விலங்கு தாக்குதல் இருப்பதாலும் மற்றும் பொது போக்குவரத்து குறைவாக உள்ளதாலும் இரவு பணி நேரத்தை குறைக்க வேண்டும். அரசு மதுபான கிடங்கு குன்னூரில் உள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதற்கு ரூ.1 லட்சம் வாடகை செலுத்தப்பட்டு வருகிறது. ஊட்டியில் கூட்டுறவு கட்டிடங்கள் பல காலியாக உள்ளன.

Tags : reopening ,stores ,district ,Tasmac ,
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...