×

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கோவையில் நாளை கிரிக்கெட் இறுதிப்போட்டி

கோவை, ஜன. 30: கோவை மு.மா.ச அறக்கட்டளை சார்பில், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கிரிக்கெட் போட்டி கோவை கொடிசியா மைதானத்தில் கடந்த 6 வாரங்களாக நடந்து வருகிறது. இதில், 64 அணிகள் பங்கேற்றுள்ளன. 960 வீரர்கள் களம் இறங்கியுள்ளனர். இதன் இறுதிப்ேபாட்டி, கொடிசியா மைதானத்தில் நாளை (ஞாயிறு) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. பரிசளிப்பு விழா மாலை 4 மணிக்கு நடக்கிறது. கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ தலைமை தாங்குகிறார். மு.மா.ச அறக்கட்டளை நிறுவனர் மு.மா.ச.முருகன் வரவேற்கிறார். திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ பரிசு மற்றும் வெற்றிக்கோப்பை வழங்குகிறார். சிறப்பாக விளையாடிய பேட்ஸ்மேன் மற்றும் பவுலர்களுக்கும் பரிசு வழங்குகிறார்.

Tags : Cricket final ,occasion ,Coimbatore ,birthday ,Stalin ,Udayanithi ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...