×

கொள்ளிடம் ஆற்றங்கரையில் கோலாகலம் துவரங்குறிச்சி அருகே காட்டெருமை மோதி கார் சேதம்

மணப்பாறை, ஜன.29: துவரங்குறிச்சி அருகே காட்டெருமை மோதி கார் சேதமடைந்தது. மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே வேலமலை வனப் பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அக்கியம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற காட்டெருமை அவ்வழியாக வந்த கார் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி கழன்று விழுந்தது. சிறு காயத்துடன் காட்டெருமை வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது. இது குறித்து துவரங்குறிச்சி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kollidam ,river bank ,
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி