தைப்பூச விழாவையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு

திருச்சி, ஜன.29: தைப்பூச விழாவையொட்டி வயலூர் சுப்ரமணிய சுவாமி கோயில் உள்பட அனைத்து முருகன் கோயிலில்களிலும் அதிகாலையே நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதலே அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தைப்பூசம் என்பது தை மாதம் பூச நட்சத்திரத்தோடு நிறைந்த பவுர்ணமி நாளில் முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். உமாதேவியார், கொடிய அரக்கன் தாரகன் என்பவனை கொன்று அழிக்க முருக பெருமானுக்கு வெற்றி வேல் வழங்கியது இந்நாளில் தான். முருகனின் வெற்றியை போற்றும் விதமாக தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

தைப்பூச விழாவையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் அதிகாலையே நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் முருகன் கோயில்களில் அலைமோதியதால் அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருச்சி வயலூர் முருகன் கோயிலிலில் காலையே சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதே போல ஜங்ஷனில் உள்ள வழிவிடு வேல்முருகன் கோயில், பாளையம்பஜார் முருகன் கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் முருகன் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Related Stories:

>