குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 138 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

திருச்சி, ஜன.29: திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் பாலசுப்பிரமணியன், திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் தர்மசீலன் அறிவுரைப்படி தொழிலாளர் உதவி ஆணையர் (சட்ட அமலாக்கம்) தங்கராசு தலைமையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட அலுவலக எல்லையுள்ள 182 நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். இதில் விடுமுறை அளிக்காத 138 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தேசிய விடுமுறை நாட்களில் தொழிலாளர்களை பணிக்கு நிர்ப்பந்திக்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி ஆணையர் தங்கராசு தெரிவித்துள்ளார்.

Related Stories: