×

முதியவர் உடல் மீட்பு

திருச்சி, ஜன.29: திருச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் இரவு 65 வயது மதிக்கத்தக்க முதியவர் உருளை மண்டி பகுதியில் இறந்தநிலையில் கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காந்தி மார்க்கெட் போலீசார் இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் அவர் பெயர் முருகன்(65) என தெரிந்தது. அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி