ஓய்வூதியர் சங்க கூட்டம்

திருச்சி, ஜன.29: ரங்கம் வட்ட ஓய்வூதியர்கள் சங்க மாதாந்திர கூட்டம் நடந்தது. தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். துணைத்தலைவர் நாச்சிமுத்து வரவேற்றார். நிர்வாகிகள், உறுப்பினர்கள் மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. செயலாளர் பாலு அறிக்கை வாசித்தார். ஓய்வூதியர்/குடும்ப ஓய்வூதியர்கள் மாதத்தில் எந்த நாளில் இறந்தாலும் அந்த மாதம் முழுமைக்கும் வாழ்நாள் நிலுவைத்தொகை வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைச் செயலாளர் ரங்கசாமி நன்றி கூறினார்.

Related Stories:

>