×

திரளான பக்தர்கள் தரிசனம் ஆன்லைன் மருந்து வணிகத்தை தடுத்து நிறுத்த வேண்டும்

மன்னார்குடி, ஜன.29: மன்னார்குடி தாலுக்கா மருந்து வணிகர்கள் சார்பில் தலைவர் பழனியப்பன், செயலாளர் சிற்றரசு, பொருளாளர் ஜெயபால் உள்ளிட்டோர் மன்னை தொகுதி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவை நேரில் சந்தித்து அவர் மூலம் முன்னாள் மத்திய அமை ச்சரும், மத்திய சென்னை தொகுதி எம்பியுமான தயாநிதி மாறனுக்கு கோரிக்கை மனு அனுப்பி வைத்தனர். அந்த மனுவில், எங்கள் சங்கத்தில் தமிழகம் முழுவதும் 45 ஆயிரம் உறுப்பி னர்களும், அதனை சார்ந்து 45 லட்சம் பேரும், அகில இந்திய அளவில் சுமார் 8.50 லட்சம் உறுப்பினர்களும் அதனை சார்ந்து சுமார் 2 கோடி பேரும் மருந்து வணிகத்தை செய்து வருகிறோம்.கடந்த 2014 ம் ஆண்டு முதல் எங்கள் தொழிலை நசுக்கும் நோக்கத்தில் மத்திய அரசு ஆன்லைன் மருந்து வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர தொடர்ந்து முயற்சித்து வந்தது. தமிழக மற்றும் பிற மாநில எம்பிக்கள் துணையோடு நாங்கள் அதனை கடுமையாக எதிர்த்து வந்தோம்.

இந்நிலையில், தற்போது மீண்டும் மத்திய அரசு ஆன்லைன் மருந்து வணிக த்தை கொண்டு வர தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்பன உள்ளிட்ட கேள்விகளை மக்களவையில் எழுப்பி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இதன்முலம் உள்நாட்டு மருந்து வணிகத்தில் ஈடுபடும் 2 கோடி பேரின் வாழ்வாதாரத்தை காக்கலாம். ஆன்லைன் வர்த்தகத்தால் ஏற்படும் சமுதாய சீரழிவிலிருந்து இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை தவறான பாதையில் செல்லாமல் தடுத்து நிறுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா கோரிக் கைகளை முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை தொகுதி எம்பியுமான தயாநிதி மாறன் கவனத்திற்கு அவசியம் கொண்டு செல்வதாக மருந்து வணிக நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.

Tags : Crowds ,devotees ,Darshan ,
× RELATED உத்திரமேரூர் வேணுகோபாலசாமி கோயிலில்...