×

கலெக்டர் ஆய்வு பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள மேலப்பெருமழையில் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி, ஜன.29: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் மேலப்பெருமழை ஊராட்சியில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊராட்சியில் உள்ள கிராமங்களில் இருந்து தெற்கு புறம் உள்ள முத்துப்பேட்டை - வேதாரண்யம் சாலை சென்று முத்துப்பேட்டை’ வேதாரண்யம் பகுதிகளுக்கு செல்லலாம். அதே போன்று கிழக்கு புறம் உள்ள பாண்டி-விளங்காடு சாலை சென்று திருத்துறைப்பூண்டிக்கு செல்லலாம். இந்த ஊராட்சியில் சுமார் 4 கிமீ சாலையை தார்சாலையாக மாற்ற பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் 2018 - 2019 ஆண்டு ரூ277.92 லட்சம்நிதி ஒதுக்கீடு செய்து 2019 ஆண்டு பிப் 19ம் தேதி பணி தொடங்கப்பட்டது.

பின்னர் சாலையில்கப்பி கற்கள் பரப்பி பல மாதங்கள் கிடந்தது. இதனால் பொதுமக்கள் நடந்து கூட போக முடியாத நிலை இருந்தது குறித்து தினகரனில் செய்தி வெளியிட்ட பிறகு கப்பிகள் கற்கள் மீது சிகப்பு கப்பி மண் அடிக்கப்பட்டு பல மாதங்களாக கிடக்கிறது.இதனால் பொதுமக்கள் வாகனத்திலும் சரி, நடந்து கூட போக முடியாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமம் பட்டுவருகின்றனர். அவசர தேவைக்கு ஆஸ்பத்திரிக்கு கூட போக முடியாத நிலை உள்ளது.எந்த நோக்கத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டதோ அது நிறைவேறாமல் உள்ளது. இரண்டு ஆண்டுகள் முடிவடைய போகிறது.இன்னும் பணி முடியவில்லை இதுகுறித்து கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கையில்லை. எனவே பொதுமக்கள் நலன்கருதி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியைவிரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Collector ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...