×

புளியக்குடி ஊராட்சியில் குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம்

தஞ்சை, ஜன.29: தஞ்சை அருகே அம்மாப்பேட்டை ஒன்றியம் புளியக்குடி ஊராட்சி வடக்குதோப்பில் குடிநீர் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 4 நாட்களாக இப்பகுதியில் குடிநீர் கிடைக்காமல் பெண்கள் காலிக்குடத்துடன் அலைந்து வருகின்றனர். ஊராட்சி குடிநீர் குழாயில் தண்ணீர் தடைப்பட்டுள்ளது குறித்து உடனே நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி புளியக்குடியில் காலி குடங்களுடன் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் மகாலிங்கம், கிளை நிர்வாகிகள் ராஜேந்திரன் உள்ளிட்ட பெண்கள் காலி குடத்துடன் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,
× RELATED பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்