தஞ்சை ஆர்டிஓ அலுவலகத்தில் மாதிரி வாக்குப்பதிவு கலெக்டர் ஆய்வு

தஞ்சை, ஜன.29: தஞ்சை ஆர்டிஓ அலுவலகத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுவதை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நேரில் ஆய்வு செய்தார். மாதிரி வாக்குப்பதிவு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்பு மாவட்ட கலெக்டரால் தொடங்கி வைக்கப்பட்டது. இம்மாதிரி வாக்குப்பதிவு நேற்று முதல் 3 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் நேரில் அணுகி தங்களது வாக்குகளை தாங்களே செலுத்தி சோதனை செய்து பார்த்து தெளிவு பெற்று கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார். ஆய்வின்போது தனி தாசில்தார் (தேர்தல்) சந்தானவேல், தஞ்சை தாசில்தார் வெங்கடேசன், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>