×

மொழிப்போர் தியாகிகள் தினம் தமிழ் வழி கல்வியை உயர்த்தி பிடிப்போம் என உறுதிமொழி

தஞ்சை, ஜன.29:  தஞ்சை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மொழிப்போர் தியாகிகள் நாளில் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி தலைமை வகித்தார்.  1965ம் ஆண்டு இந்தி மொழி திணிப்புக்கு எதிரான மொழிப் போரில் உயிர் நீத்த சாரங்கபாணி, ராஜேந்திரன், தண்டபாணி உள்ளிட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது தமிழ் மொழிவழிக் கல்வியை உயர்த்தி பிடிப்போம், ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தமிழில் பயில்வோம். நீட் உள்ளிட்ட உயர் கல்விக்கான தேர்வுகளை ரத்து செய்யும் வரை உறுதியுடன் போராடுவோம். தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கு முன்னுரிமை அளிக்க அரசை வலியுறுத்துவோம் என உறுதியேற்கப்பட்டது. நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர் முத்துகுமரன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன், அரசு போக்குவரத்து சங்கம் கஸ்தூரி, ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரை, உடல் உழைப்பு சங்க மாவட்ட பொருளாளர் சுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil ,Martyrs' War ,
× RELATED தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு