×

தைப்பூசத் திருவிழாவையொட்டி முருகன் கோயில்களில் காவடி எடுத்து பக்தர்கள் தரிசனம்

அரியலூர், ஜன.29: அரியலூர் மாவட்டத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முருகன் கோயில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் சுப்ரமணியர் கோயிலில் நடைபெற்ற இரண்டாமாண்டு தைபூசத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 24ம் தேதி முதல் பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து வந்தனர். நேற்று கணபதி ஹோமம், கோ பூஜை செய்து ஆண், பெண் பக்தர்கள் காப்பு கட்டி செல்லியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள ஏரியிலிருந்து காவடி, பால்குடம் எடுத்து, மேளங்கள், வானவெடிகள் முழங்க சாமி வந்த பெண்கள், ஆண்கள் நடனமாடியபடி முக்கிய வீதிகள் வழியாக வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதில் தமிழ்முறைபடி வேதமந்திரங்கள் முழங்க சித்தி விநாயகர், முருகன், வள்ளி தெய்வானைக்கு பால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது, தொடர்ந்து கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் அரியலூரில் உள்ள சுப்பிரமணியர் ஆலயம், கல்லங்குறிச்சி சாலையில் குறைதீர்க்கும் குமரன் கோயில், அஸ்தினாபுரம் கிராமத்தில் உள்ள 22 அடி உயரம் சிலை கொண்ட முருகன் கோயில், செந்துறை, திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூசத்திருநாளையொட்டி நேற்று சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

Tags : Devotees ,darshan ,temples ,occasion ,festival ,Murugan ,
× RELATED கோடை விடுமுறையை கொண்டாட கொளுத்தும் வெயிலிலும் குவிந்த பக்தர்கள்