வயலப்பாடி கிராமத்தில் மின் கசிவால் இரண்டு வீடுகள் தீப்பிடித்து சேதம்

பெரம்பலூர்,ஜன.29: வயலப்பாடி கிராமத்தில் மின் கசிவால் தீப்பிடித்து 2 வீடுகள் எரிந்து சேதமானது. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலப்பாடி அடுத்த கீரனூர் கிராமத்தில் கந்தசாமி மனைவி மூக்காயி, தங்கமணி மனைவி கவிதா ஆகியோரது கூரை வீடுகள் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. இதனால் வீடுகள் முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் அவர்களின் மொத்த உடமைகள், பணம், தங்க நகைகள், குழந்தைகளின் பள்ளி பாடப்புத்தகங்கள், பருத்தி, மக்காச்சோளம், தையல் மெஷின் போன்ற சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில்,வேப்பூர் ஒன்றியக்குழு துணைத் தலைவர் செல்வராணி வரதரா ஜன், மண்டல செயலாளர் கிட்டு மற்றும் பெரம்பலூர் மாவட்ட, வேப்பூர் ஒன்றிய நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

Related Stories:

More
>