×

போலீசார் ஒத்திகை ஜெயங்கொண்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு


ஜெயங்கொண்டம், ஜன.29: அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சார்பில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறித்தும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பக்கங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்த புகார்தாரர்கள், பொதுமக்கள் மற்றும் அப்பகுதி குடியிருப்புவாசிகளிடம் வழங்கப்பட்டது. முடிவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க திருச்சி சரக காவல் துறையின் உதவி எண்கள் 6383071800, 9384501999 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

127.40 ஏக்கர் பாதிப்பு
வெள்ளத்தில் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் 153.83 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்களில், 80.86ஏக்கர் நெற்பயிர்கள், 27.49ஏக்கர் மக்காச்சோளம், 6.69ஏக்கர் நிலக்கடலை, 3.6 ஏக்கர் மஞ் சள், 3.8ஏக்கர் மரவள்ளி, 3.7 ஏக்கர் தீவனப் பயிர், 1 ஏக் கர் மிளகாய், அரை ஏக்கர் கோழிக் கொண்டை என 127.40ஏக்கர் பயிர்கள் சேத மடைந்துள்ளன. வேளாண் சாகுபடிக்கு பயன்பட்டு வந்த 6 கிணறுகள் முழுமையாகவும், 8 கிணறுகள் பாதி அளவுக்கும் என 14 கிணறுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. ஒரே ஒரு கன்றுக்குட்டி மட்டும் வெள்ளத்தில் சிக்கிப் பலி யானதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Tags :
× RELATED நாட்டார்மங்கலத்தில் மாரியம்மன் வீதி உலா