திருபட்டினம் காந்தி மார்க்கெட் வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட பூமிபூஜை

காரைக்கால், ஜன. 29: திருபட்டினம் காந்தி மார்க்கெட் வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமிபூஜை நடந்தது. இதில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பங்கேற்றார். காரைக்கால் மாவட்டம் திருபட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து காந்தி மார்க்கெட் வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டி மார்க்கெட்டை மேம்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலமாக ரூ.18,43,537 மதிப்பில் பூமிபூஜை நடந்தது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், நிரவி- திருப்பட்டினம் எம்எல்ஏ கீதா ஆனந்தன், காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஆதர்ஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>