மருதூரில் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

வேதாரண்யம், ஜன. 29: வேதாரண்யம் தாலுகா மருதூர் தெற்கு கிராமத்தில் நாகை தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். மாவ ட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முருகையன் வரவேற்றார். நாகை தெற்கு மாவட்ட செயலாளர் கவுதமன், மருத்துவரணி இணை செயலாளர் லட்சுமணன், தலைமை கழக பேச்சாளர் வேங்கை சந்திரசேகர், வேதை மேற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார் சிறப்புரையாற்றினர். கூடடத்தில் திமுக நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர். முன்னதாக மேடையில் அமைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: