×

தமுமுக மாவட்ட ஆலோசனை கூட்டம்

காரைக்கால், ஜன. 29: காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டம் நடந்தது. மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ஜெய்லாபுதீன் தலைமை வகித்தார். மருத்துவ சேவை அணி மாவட்ட பொருளாளர் புஹாரி முன்னிலை வகித்தார். தமுமுக மாநில செயலாளர் அப்துல் ரஹிம், மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது, மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் முஹம்மது பயாஸ் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். கூட்டத்தில் வரும் 30ம் தேதி காமராஜர் சாலையில் மருத்துவ முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள் முஹம்மது மெய்தீன், சிக்கந்தர், தமுமுக மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் நஜிம், மமக விவசாய அணி மாவட்ட செயலாளர் டேவிட் பங்கேற்றனர்.

Tags : Tamumuka District Consultative Meeting ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது