×

தைப்பூசத்தையொட்டி பால்குட ஊர்வலம்

மயிலாடுதுறை, ஜன. 29: தைப்பூச திருவிழாவையொட்டி மயிலாடுதுறை கிட்டப்பா தெரு, அண்ணா வீதி தெருவாசிகள் சார்பில் பால் காவடி, பன்னீர்காவடி, புஷ்பகாவடி, மயில் காவடி, அலகு காவடி, தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக காவிரி கரையிலிருந்து புறப்பட்டு மயூரநாதர் கோயிலில் உள்ள முருகன் சன்னதியை சென்றடைந்தனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் முன்னிலையில், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் கமலநாதன், சம்பத், மாசிலாமணி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது