×

பாலமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா தேரோட்டம்

க.பரமத்தி, ஜன.29: க.பரமத்தி ஒன்றியம் பவித்திரம் ஊராட்சியில் பாலமலை பாலசுப்பிரமணி கோயில் உள்ளது. மிகவும் சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் கடந்த 22ம்தேதி தை மாத கிருத்திகையை தொடர்ந்து காலை முருகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தை பூச தேரோட்ட விழாவை முன்னிட்டு காலையில் பல்வேறு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டு கொடியேற்றதுடன் தைப்பூச விழா துவங்கியது. தொடர்ந்து முருகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.

நேற்று காலையில் காவிரியில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு சுவாமிக்கு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் மூலவருக்கு வெள்ளியில் ராஜா அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தோரோட்டம் மாலை 4.30மணிக்கு கோவில் மழை அடிவாரத்தில் இருந்து புறப்பட்டு மழையை சுற்றி வலம் வந்து மீண்டும் மழை அடி வாரத்தை வந்தவுடன் நிறைவுற்றது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், ஒன்றிய சேர்மன் மார்க்கண்டேயன், ஒன்றிய துணை தலைவர் குழந்தைசாமி, கோவில் விழா கமிட்டியினர், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுவாமி தரிசனம் செய்த அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Tags : ceremony ,Palamalai Murugan Temple ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா