×

தோகைமலை அடுத்த புழுதேரியில் விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பு பயிற்சி

தோகைமலை, ஜன.29: தோகைமலை அருகே இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையம் சார்பில் கூட்டு மீன் வளர்ப்பு குறித்த 3 நாள் பயிற்சி நடந்தது. நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் பரமேஸ்குமார் தலைமை வகித்தார். இதில் வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி திரவியம், குளித்தலை மீன் வளத்துறை உதவி ஆய்வாளர் கர்ணன் ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதில் கூட்டு மீன் வளர்ப்பு குறித்த தொழில் நுட்பங்கள், மானிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் மீன் வளர்ப்பில் வெற்றிபெற்ற தொழில் முனைவோர்கள் லால்குடி நிக்சன், கரூர் அபிலன் ஆகியோர் கலந்து கொண்டு கூட்டு மீன் வளர்த்தல் குறித்து தங்களது அனுபவங்களை விளக்கினர். 2ம் நாள் பயிற்சில் தஞ்சாவூரில் உள்ள மீன் வள பல்கலைக்கழகத்திற்கு விவசாயிகளை அழைத்து சென்று, உதவி பேராசிரியர் செந்தில் குமார் கூட்டு மீன் வளர்ப்பில் மீன் இனங்களை தேர்ந்தெடுத்தல், குட்டை அமைத்தல், தீவன மேலாண்மை மற்றும் பராமரிப்பு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். தொடர்ந்து நங்கவரம் மற்றும் களத்துப்பட்டியில் அமைந்துள்ள மீன் பண்ணைகளுக்கு அழைத்து சென்று விளக்கம் அளிக்கபட்டது. பயிற்சியில் தொழில்நுட்ப வல்லுநர் தமிழ்செல்வி உள்பட 25 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Pudutheri ,Tokaimalai ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு