×

மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் தைப்பூசவிழா: நீதிபதி சிவஞானம் ஜோதி ஏற்றினார்

மேல்மருவத்தூர்:  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச விழா நேற்று அதிகாலையில், மங்கள இசையுடன் துவங்கியது. காலை 9.30 மணிக்கு சித்தர் பீடம் வந்த பங்காரு அடிகளாருக்கு, பக்தர்கள் பாதபூசை செய்து வரவேற்றனர். தொடர்ந்து 10 மணிக்கு அன்னதானத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் துணை தலைவர் தேவி ரமேஷ் துவக்கி வைத்தார். முன்னதாக, நேற்று அதிகாலை 3 மணிக்கு, பாஜ எம்பி இல.கணேசன், கோயிலில் தரிசனம் செய்தார். மாலை 4 மணிக்கு டிரம்ஸ் கலைஞர் சிவமணி மற்றும் ஸ்டீபன் தேவஸ்ஸி குழுவினரின் இன்னிசை நடந்தது. மாலை 4.45 மணியளவில் தைப்பூச ஜோதி ஏற்றும் விழா மங்கள இசையுடன் துவங்கியது. ஜோதியை ஏற்ற பயன்படும் “குரு ஜோதி” ஏற்றும் நிகழ்ச்சி பங்காரு அடிகளார் இல்லத்தின் முன் நடந்தது. முன்னதாக கோபூஜை நடத்தி, பின்னர் குரு ஜோதியை ஆன்மிக இயக்க துணை தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் ஏற்றி வைத்தார்.

மாலை 5 மணிக்கு அடிகளார் இல்லத்தில் இருந்து குரு ஜோதி ஊர்வலத்தை ஆன்மிக இயக்க துணைத்தலைவர் கோ.ப.செந்தில்குமார் முன்னிலை வகித்து துவங்கி வைத்தார். மாலை 6.30 மணிக்கு பங்காரு அடிகளார் ஜோதி திடலுக்கு வந்தார். முன்னதாக சித்தர் பீடம் வந்த உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், கருவறையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு தீபாராதனை காட்டி வழிப்பட்டார். 6.45 மணிக்கு பங்காரு அடிகளார் முன்னிலையில் நீதிபதி சிவஞானம் தைப்பூச ஜோதியை ஏற்றினார். இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் முருகேசன், ராஜேஸ்வரன், பெரம்பலூர் மாவட்ட நீதிபதி கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், ஜோதி பிரசாத விநியோகத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க அறங்காவலர் உமாதேவி ஜெய்கணேஷ் துவக்கி வைத்தார்.

Tags : Thaipusam Festival ,Sivagyanam ,Melmaruvathur Siddhar Peetha ,
× RELATED தைப்பூச திருவிழா வரும் முன் கடம்பன்...