சென்னை; 77ஆவது குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் முதல்வர் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்தார். சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றினார். ஆளுநர் ரவி தேசியக் கொடி ஏற்றிவைத்தபின் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. இதைத்தொடர்ந்து முப்படை வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையின் துறை சார்ந்த வாகன அணி வகுப்பு நடைபெற்றது.
தொடர்ந்து முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சிறப்பு விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவிப்பார். மாநிலம் முழுவதும் அசம்பாவிதங்களை தடுக்க 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
