×

‘கலைஞர்’ தலமரக்கன்று நடும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பல்வேறு திருக்கோயில்களில் தலமரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன!!

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 07.08.2021 அன்று சென்னை, நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ‘கலைஞர்’ தலமரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கும் முகமாக நாகலிங்க தலமரக்கன்றை நட்டு விழாவைத் தொடங்கி வைத்தார்கள். இந்து சமய அறநிலையத்துறை பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் சிறப்பாக விரைந்து செயல்படுத்தி வருகிறது.         திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் ஒரு இலட்சம் தரமரக்கன்றுகள் நடுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மூன்று மாதக் காலத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, திருச்சி, சிவகங்கை, வேலூர் மாவட்டங்களில் உள்ள பல்வேறு திருக்கோயில்களில் அந்தந்த தலமரங்களான மாமரம், புன்னை, வில்வம், செண்பகம், மருதம், நாவல், சந்தனம், மகாக்கனி, இலுப்பை கொய்யா, மகிழம் போன்ற மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கடம்ப மரத்தை வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள மூங்கில் மரத்தை வணங்கினால் இசை ஞானம் வளரும், மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் உள்ள மாமரத்தை வணங்கினால் வெற்றி கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இத்தகு பெருமைமிகு தலமரங்களைப்  மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் மேலப்பரங்கிரி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில், திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளி அம்மன் திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், அருள்மிகு பாபநாசம் சுவாமி திருக்கோயில். அம்பாசமுத்திரம் அருள்மிகு காசிநாத சுவாமி திருக்கோயில் உட்பட பல்வேறு திருக்கோயில்களில் தலமரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. …

The post ‘கலைஞர்’ தலமரக்கன்று நடும் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பல்வேறு திருக்கோயில்களில் தலமரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chief Minister of ,Mr.M.K.Stalin ,Chennai, Nungambakkam ,Hindu ,Charities ,Commissioner ,Tamilnadu ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...