×

ராணுவ வீரர், காவலர் உட்பட 3 பேர் மீது வழக்கு அனுமதி நேரத்தை மீறி மாடு விட்டதால் நடவடிக்கை வேலூர் அருகே மாடுவிடும் திருவிழாவில் தகராறு

வேலூர், ஜன.29: வேலூர் அருகே மாடுவிடும் திருவிழாவில் தகராறில் ஈடுபட்ட ராணு வீரர், காவலர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.வேலூர் தாலுகா ஆற்காட்டான்குடிசை கிராமத்தில் நேற்றுமுன்தினம் மாடுவிடும் திருவிழா நடந்தது. திருவிழா காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1 மணியளவில் முடிவடைந்தது. நிகழ்ச்சி முடிந்த நிலையில் திடீரென ஒரு காளையை 4 பேர் கொண்ட வாலிபர்கள் கொண்டு வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கு தகராறு ஏற்பட்டது. மேலும் போலீசார் தடுப்பு அமைத்து இருந்த வேலிகளை பிடிங்கி ஏறிந்தனர். ‘எங்கள் ஊரில் நாங்கள் இப்படி தான் காளையை விடுவோம், நீங்கள் யார் எங்களை கேட்க’ என்று கூறி காளைவிட்டனர். இதனால் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விஏஓ ரீனா வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதில், காளைவிடும் திருவிழாவில் அதே கிராமத்தை சேர்ந்தவரும், சேவூர் 15வது சிறப்பு பட்டாலியன் படையில் பணியாற்றும் காவலர் ஜெகதீசன், அவரது தம்பி ஜெகன், ராணுவீரர் தமிழ்வாணன் ஆகிய 3 பேரும் போலீசாரை பணி செய்யவிடாமலும், பணியை தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் வேலூர் தாலுகா போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : persons ,soldier ,policeman ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...