மெஞ்ஞானபுரம் பரி.பவுலின் ஆலய 174வது பிரதிஷ்டை விழா

உடன்குடி, ஜன.29: மெஞ்ஞானபுரம் பரி.பவுலின் ஆலய 174வது பிரதிஷ்டைவிழாவில் அசன விருந்து நடந்தது. மெஞ்ஞானபுரம் பரி.பவுலின் ஆலய 174வது பிரதிஷ்டை, அசனவிழாவை முன்னிட்டு கடந்த 24ம்தேதி பார்வையற்றோர் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும், 25ம்தேதி சிறப்பு கன்வென்ஷன் கூட்டமும், 26ம்தேதி ஸ்தாபனங்களின் கலைநிகழ்ச்சியும், 27ம்தேதி எலியட்டக்ஸ்போர்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கனம்.ரேனியஸ் சிற்றாலயத்தில் திருவிருந்து ஆராதனையும், அசன வைபவ மங்கலகால் நடும்விழாவும், மாலை பரிசுத்த ஞானஸ்நான ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து ஆயத்த ஆராதனையில் ஸ்பிக்நகர் சேகரகுரு இம்மானுவேல் வான்றக் அருளுரையளித்தார். 28ம்தேதி 174வது பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை மற்றும் பரிசுத்த திருவிருந்து ஆராதனையில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் அருளுரையளித்தார். தொடர்ந்து கனம் ஜான்தாமஸ் ஐயரவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்துதல், அசன உலை ஏற்றும் வைபவமும், மாலையில் அசன வைபமும், இரவு வாணவேடிக்கையும் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பொதுமகமை சங்க தலைவர் ஜெயபோஸ், உபதலைவர் ஜெரால்டு ஜாண்சன், செயலாளர் நவமணிராபர்ட், இணைச்செயலாளர் செல்வின், பொருளாளர் சொர்ணராஜ், சேகரகுருக்கள் ஸ்டீபன்பால் ஞானராபின்சன், கோல்டுவின், எட்வின் ஜெபராஜ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Related Stories:

>