கோவில்பட்டியில் ராமலிங்க சுவாமி குருபூஜை விழா

கோவில்பட்டி, ஜன. 29: கோவில்பட்டியில் வள்ளலார் ராமலிங்க சுவாமி 53வது ஆண்டு அன்னதான குருபூஜை விழா நடந்தது. காசிராஜ சுவாமிகள் முன்னிலை வகித்தார். இதையொட்டி காலை 7 மணிக்கு ஞானயோகத் தியானம், 7.30 மணிக்கு மாரியப்பன் குழுவினரின் மங்கள இசை, 8 மணிக்கு அகவல் பாராயணம், 9.30 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி ஆராதனை, 10 மணிக்கு சன்மார்க்க சொற்பொழிவு ஆகியவை நடந்தது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது.

விழாவில் யாழினி மகிழா சார்பில் அபிராமி, விசாலியின் திருவருட்பா பாடப்பெற்று குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் செல்வகுமார், ஹரி ராம்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>